கவிச்சாரல் கவிதைகள் தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏🏻 கவிச்சாரல் கவிதைகள்: காதல்
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜனவரி, 2022

களவுக்காதல்

காதலும் ஒரு களவுதான்....
எதிர்பாராது உள்ளங்களை களவாடுவதால்....
பன்முறை என்னுள்ளங் களவுபோனது...
காரணம் அவளின்றி யாரோ...
அவ்வப்போது அருகு செல்வேன்...
சொல்லாயெங் காதலைச் சொல்லிடலாமென....
நடுக்கம் வந்தே தடுத்ததோ...
இல்லையவள் நம்பிக்கை தடுத்ததோ...
கடைக்கண் பார்வையோடே நகர்ந்திடுவேன்...
அவளைக் காணுங் காதலில்
நான் தவறவிட்ட பேருந்துகள்
நான் தனித்து நடக்கையில்
என்னை வசைபாடிச் செல்கின்றன...
நண்பன் மட்டுமே வழித்துணைக்கு...
நான் அவளைப் பார்க்கையில்
அவளோ என்னைப் பாராள்
அவள் என்னைப் பார்க்கையில் 
நானோ அவளைப் பாரேன்...
அருகருகிருந்தும் கண்ணாமூச்சி விளையாட்டு...
அவள் தேகந்தீண்டீய தென்றல்
தாங்கி வந்து சேதிகூறும்...
கல்லூரிக் காலத்தின் இறுதினாளோடு
அவள் கடைக்கண் பார்வையை
தொலைத்திட்டு விடைகொண்டு சென்றேன்.....
மீண்டும் அக்காதல் மீளுமாயென்பது
தூதுவனாக வந்த தென்றலொன்று
மட்டுமே யறிந்த சேதி....
                                  -நா.மணிகண்டன்.

திங்கள், 25 அக்டோபர், 2021

மையல்

காரிருள் ஆழ்த்தும் கழகத்தில்
மேகங்கள் தூவிய பன்னீரில்
கனப்பொழுதில் காரிகை வந்தாள்...
கருநீலப் பொட்டிட்ட விழிகள்
செந்தாமரைச் சாயல் செவ்விதழ்
மானிடம் மயக்கும் மையல்
மங்கையெனப் படைத்திட்ட மாயவள்...
மாறனின் மலர்க் கணைகளை
வெல்லத் துடித்த யென்னை
வெற்றுப் புன்னகையில் வீழ்த்திட்டாள்....
மெல்லத் தீண்டிய தென்றலால் 
மையல் கொண்டேன் அவளிடம்....
                                நா.மணிகண்டன்.